எம தர்மனையே வந்து பார் என நேருக்கு நேர் சாவல் விடும் அந்த விவிஐபி மூலம், பணியிட மாற்றம் கோரிய போக்குவரத்து அதிகாரிகளான ஒரு பெருமாளும், ஒரு பெண் அதிகாரியும்.....
"பிரியா" பல லட்ச ரூபாய்களை "காத்து வாக்குல ஏமாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட உள்ளார்களாம்.
மேலும், விஜிலென்ஸ் அதிகாரிகளாலும் அவர்கள் விரைவில் வளைக்கப்படுவார்கள் என்பதும் போக்குவரத்து வட்டாரத்தில் இருந்து கிசுகிசுக்கப்படுகிறது.
இதில் அந்த ஆண் ஆய்வாளர், தனது RTO அலுவலகத்திற்கு வரும் இளம் பெண்களிடம் "என்ன நீ இப்படி டிரஸ் போட்டிருக்க, ஏன் இப்படி டைட்டா போடுற மேல் பட்டன் கழண்டு போச்சு பாரு....என "மரை" கழண்ட மாதிரி, "லூசு" போல பேசி வருகிறாம்.
இப்படி ஏற்கனவே இதுமாதிரி பேசியதற்கான சில புகார்களும், கடந்த சில வருடங்களாகவே இவர் மீது தொடர்ந்து போக்குவரத்து நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதால் உயர் அதிகாரிகளால் அவர் எச்சரிக்கவும் பட்டாராம்.
ஆனாலும், இவர் திருந்தியபாடில்லை "அருவாள்" கலாச்சாரத்திற்கு பெயர் போன மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அவர் இதற்கான சூழல்கள் அறிந்து தன்னை திருத்திக்கொள்வது நல்லது என்றும், ஒருமையில் பேசுவதை நிறுத்துவதும்,அவருக்கு சாலச்சிறந்தது என போக்குவரத்து மற்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்தும் செய்திகள் வாசிக்கப்படுகிறது.
எனவே, ஏமாற்றிய விவகாரங்களும் நாகரீகமற்ற பேச்சுக்களுக்கான நடைமுறைகளும் மேலும், மேலும் விரிவடைவதற்குள் உரியவர்களின் கவனத்திற்கு சென்று சீராக்கப்பட்டால் சரி.
காசு-யை (லஞ்சம்) வாங்குவது போல, காசையும் கொடுத்து, வம்பையும் விலைக்கு வாங்குகிறவர்கள்தான் இந்த போக்குவரத்து அதிகாரிகளோ?
புரிகிறவர்களுக்கு புரிந்தால் சரி. பிரச்சனைகளும் தீர்ந்தால் சரி
நெல்லை கோபால்.
மூத்த பத்திரிகையாளர்