கடந்த 09-11-2022 - ல் (புதன்கிழமை) ஈரோடு மாவட்டம், ஊராட்சிக்கோட்டை பகுதியில் இயங்கி வந்த RTO அலுவலக "பகுதி " (Unit office) அலுவலகத்தில், விஜிலென்ஸ் DSP ஆன ராஜேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி வேட்டை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணமான ரூபாய் 2 லட்சத்து பத்தாயிரம் பிடிபட்டது. இதனை தொடர்ந்து மோட்டார் வாகன "ஆய்"வாளர் சுகந்தி, அவரது புரோக்கர்களான சந்தோஷ், வரதன் என்கிற வரதராஜ், சம்பு என்ற சண்முகம், நல்லசாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததற்கான செய்திகள் ஊடகங்கள் மூலமாக மின்னல் வேகத்தில் வைரலாகி கொண்டுள்ளது. (பார்க்க: ஜீ.வி-யின் இணைய தளத்தில் வந்த செய்தி.)
இதனால் "ஆய்"வாளர் சுகந்தியின் "சுகம்" கெட்டு, படபடத்து வேர்த்து வியர்த்து வந்தாலும், மிக தைரியமாக இருப்பதை போல் வெளிகாட்டி, தனது செல்போன் - ல் வரும் தொடர்புகளுக்கும் அவரது அதிரடியான பதிலையும் இப்படித்தான் அளித்து வருகிறாராம்.
அதாவது "என்னை என்ன Trap - "ஆ" செய்தது இந்த போலீஸ்?என்னை எப்படி கைது செய்ய முடியும்?
எனது அலுவலகத்திற்கு வந்த போலிசார் புரோக்கர்களிடம் இருந்த பணத்தை புடுங்கினால் அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்? அதற்காக என்னை போலீஸ் கைது செய்யுமோ? என கேள்விமேல் கேள்வி எழுப்பி வருகிறாராம்(அம்மாடி புரோக்கர்கள் அலுவலகத்திற்குள் வர தடை உள்ளது என்பதை மறவாதீர்) ரெய்டு நடத்திய போலீஸ்க்கு தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பார்க்கட்டும் " இனி எக் காலத்துக்கும், அந்த போலீஸ்கள் காக்கிசட்டையே போட முடியாதளவுக்கு, அவர்களை எல்லாம் என்னால் சிறைக்குள் அனுப்ப முடியும் என அதிரடியான நடவடிக்கை எடுத்த DSP - ராஜேஷ்-க்கும், விஜிலென்ஸ் போலீசார்களுக்கும் சவால் விட்டு, கடுகடுத்த குரலில் கடுப்பேத்தி வருகிறாராம் சுகந்தி.
அதே நேரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் "சுகந்தி" கைது என்ற செய்தியை தொடர்ந்து, பெரும்பாலான தகவல்கள் சுகந்தியை சுற்றி இப்படித்தான் அதிர்கிறது. அதாவது இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம், கேஸை பார்த்துக்கலாம், அரெஸ்ட் வராமலும் பார்த்துக்கிடலாம், இப்போதைக்கு செயலாக்க பிரிவிலே நல்ல வருமானம் வரும் அளவுக்கான உரிய ஒரு பணியிடத்தை பெற்று, உடனே ஒரு போஸ்ட்டை வாங்கிடலாம்,பணியிடை நீக்கத்தையும் தவிர்க்கலாம்,ஏன்னா, உடனே ஒரு இடத்தை தக்க வச்சுக்கிடனும், அதனால சஸ்பெண்ட் ஆர்டரை எல்லாம் தவிர்த்திடலாம், இதுல நிறைய வேலை இருக்கிறதுனால, கீழே இருந்து மேல வரைக்கும் லட்சங்களும், கோடிகளும் தான் செலவாகும், அப்படியே அந்த இடத்துல ஒரு வருஷத்திற்கு காலத்தை தள்ளுங்க, அப்பறம் பவானி போல, நல்ல கலெக்ஷன் வரும் இடமா பார்த்து போஸ்டிங் வாங்கிடலாம் , செலவை பாத்துக்கோ, ஜமாய்த்திடலாம் என புரோக்கர்களான, சில போக்குவரத்து துறை அதிகாரிகளே சுகந்திக்கு சூடேற்றி வருகின்றனர்.
நூறுக்கும், ஐநூறுக்கும் ஆசைப்படுகிற VA0 மற்றும் அரசின் கடைநிலை சார்ந்த அதிகாரிகளை எல்லாம் சிறை கம்பிகளுக்கு பின்னால் நிறுத்தும் விஜிலென்ஸ் போலீசார், இந்த போக்குவரத்து துறையில் "மிஷன்" வைத்து எண்ணும் அளவுக்கு பணங்களை கைப்பற்றினாலும், அவர்கள் கைது செய்யப்படாமலும், உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படாமலும், விட்டு விடப்படுவதால்தான் இடைத்தரகர்களின் பேரங்களும் அதிகரிக்கிறது. அதனால் மற்றொரு ஊழலும், இதனை தொடர்ந்து எழுகிறது. எனவே இது போன்ற சூழல்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படுவதுபோல, சுகந்தி விஷயத்தில் ஒரு அதிரடியான நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும். அது ஊழல்வாதிகளுக்கு ஒரு பாடமாகவும் அமைய வேண்டும்.
ஆம், நான் ஒன்றும் கைது செய்யப்படவும் இல்லை,பணியிடை நீக்கமும் செய்யப்படவில்லை, என்னை எவரும் கைது செய்யவும் முடியாது, ஏன் பல பல லட்சங்களை விட்டெறிந்தால் பணியிடை நீக்கத்தை கூட தவிர்க்கலாம் என தெனாவட்டாக பேசி வருவதோடு, ஊடகங்கள்தான், என் மீது தவறான செய்திகளை பரப்பி வருகிறது என பார்ப்போர்கள் எல்லோரிடமும், மற்றும் தொலைத்தொடர்புகளில் வருவோரிடமும் கூறிவருகிறார் சுகந்தி.
அதே போல், என் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய அதிகாரங்கள் உள்ள, அரசின் உயர் அதிகாரிகளான எவருக்கும், என் மீது நடவடிக்கை எடுக்க தகுதியில்லை என்றும், குறிப்பாக அமைச்சர் அலுவலகத்திற்கு "ஒரு புள்ளி" அளவு கூட தகுதியில்லை என கூறி, தனக்கு வேண்டப்பட்டவர்களிடம் எல்லாம் வீராப்பு காட்டும் சிங்காரி கவிதா சிறைபிடிக்கப்பட்டு, பணியிடை நீக்கப்படுவரா? என்பதே தற்போது போக்குவரத்து துறையில் நடக்கும் பட்டிமன்ற விவாதங்களில் ஒன்றாகும்.
அதே நேரத்தில் இதுவரை சுகந்தி பணியாற்றிய பல்வேறு பகுதிகளில் இருந்து வாழும் பொதுமக்கள் பலரும் சுகந்திக்கு எதிராக இப்படித்தான் ஒரு கோரிகையினை எழுப்பி வருகிறார்கள். அதாவது ஒரு ஊழல் அதிகாரியான, இந்த பொம்பளைக்கு இப்படியொரு "அல்டாப்புகள்" இருக்க கூடாது. இந்த அம்மா (சுகந்தி) சிறைப்பிடிக்கப்பட வேண்டும், இவரது வருமானத்துக்கு மீறி சேர்த்து வைத்த சம்பாத்தியங்களுக்கான சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
என்ன செய்யப்போகிறது அரசு ? பொறுத்திருந்து பார்ப்போம்.
நெல்லை கோபால்.
மூத்த பத்திரிகையாளர்